பெரம்பலூர் அடுத்துள்ள துறைமங்கலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் இன்று பகல் ஒரு மணி அளவில் நடைபெற்றது,
மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில செயலாளர் அரவிந்தசாமி, மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு பேசினார் கூட்டத்தில், மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில்,கல்வி வளர்ச்சி நிதியைத் தராத மத்திய அரசைக் கண்டித்தும், மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும் வரும் பிப்ரவரி -25ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம், மற்றும் திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் மாணவர் சங்கங்களுடன் இணைந்து, மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.