பெரம்பலூர் தீரன் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது மாவட்ட குழு உறுப்பினர்கள் அமுதா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெயராமன் வேலை அறிக்கை முன்வைத்து பேசினார் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன் மாநில நிர்வாக குழு முடிவுகளை விளக்கிப் பேசினார் கூட்டத்தில் ஒன்றிய அரசின் திறமை இல்லாத ஆட்சியின் காரணமாகநாள்தோறும் ஏறி வரும் விலைவாசியை கண்டித்தும்சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்தும் 7/9/ 2024 சனிக்கிழமை காலை 10 மணிக்கு புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதெனவும், செப்டம்பர் 20க்குள் ஜனசக்தி சந்தா சேர்ப்பு இயக்கம் நடத்தி 100 ஆண்டு சந்தா வசூல் செய்து கட்சியின் மாவட்ட பேரவை நடத்தி மாநில செயலாளரிடம் வழங்குவதெனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.