மாவட்ட ஆயுதப்படையில் காவல் வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது

76பார்த்தது
மாவட்ட ஆயுதப்படையில் காவல் வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது
பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமையில் மாவட்ட ஆயுதப்படையில் காவல் வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது.

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 02 நான்கு சக்கர வாகனங்கள், 17 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 19 வாகனங்கள் தற்போது உள்ள நிலையில் பொது ஏலம் வருகின்ற 13. 07. 2024-ம் ஆம் தேதி காலை 10. 00 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணைக்காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட உள்ளது.
மேலும் இந்த பொது ஏலத்தில் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆயுதப்படை வாகனப்பிரிவு அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது 9498159193, 9498158918 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி