பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பூலாம்பாடியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் சேகர் உள்பட வேப்பந்தட்டை வட்டார டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியா ளர்கள் பலர் சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின், மாவட்டத் தலை வர் ரெங்கநாதன் ஆகியோருடன் வந்து மனு அளித்தனர், அதில் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் போலியோ மற்றும் டைபாய்டு, சிக்கன் குன்யா மற்றும் டெங்கு காய்ச்சல் காலங்களில் கொசு மருந்து அடித்தல், வீடு வீடாக சென்று பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றபணிகளை செய்து வந்த நிலையில், தற்போது கூடுதலாக வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு 10 நபர்கள் புதிதாக நியமணம் செய்தனர்.
தற்சமயம் ஆள் குறைப்பு என்ற பெயரில் கழற்சி முறையில் பணி தருகிறோம் என கூறி. பணிபுரியும் பழைய நபர்களாகிய எங்களை 10 மாதங்களாக நிறுத்தி விட்டு, தற்சமயம் வந்த நபர்களை மட்டும் வைத்து க்கொண்டு பணி வழங்குகின்றனர். எங்களுக்கு வேறு எந்தவாழ்வாதாரமும் இல்லை. மாத சம்பளத்தை நம்பி 17 ஆண்டுகளாக வாழ்த்து வந்த நிலையில், இந்த
வேலை நிறுத்த நட வடிக்கையால் மிகுந்த மன வேதனையும், குடும்ப வறுமை சுமையும் ஏற்பட்டுள்ளது. எனவே ஆட்சியர் துறை ரீதியாக விசாரணை நடத்தி, மீண்டும் எங்களுக்கு இந்த பணியை வழங்க ஆவணம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்
.