பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முது நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் கோரிக்கை முழக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாநில அளவில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும் நிலையில்,
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது, இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர், சிலம்பரசன் கலந்து கொண்டு சிறப்புரையா ற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, மாவட்ட அமைப்புச் செயலாளர் செந்தில் குமார், மாவட்ட தலைமையிட செயலாளர் ராமன், மாவட்ட துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மற்றும் அரசு, துறை சார்ந்த சங்க நிர்வாகிகள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.