மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி தமிழக அரசை வலியுறுத்தி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்
பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் மின்சாரக் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் வீடுகளுக்கு மின்சார உபயோகிக்கும் அளவீட்டை மாதம் ஒருமுறை கணக்கீடு செய்ய வேண்டும், அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணம் உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை தமிழக அரசுக்கு வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
இந்த ஆர்ப்பாட்டத்தில்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன், முன்னாள் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வேணுகோபால், ஒன்றிய செயலாளர்கள் கலியபெருமாள், சின்னதுரை, ராஜேந்திரன், பழனிச்சாமி, நகரச் செயலாளர், கல்யாணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் கருப்பன், தங்கவேல், அமுதா, பாண்டியன், ஆறுமுகம், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.