அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்காத மற்றும் பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய பாஜக அரசை கண்டித்தும் மேலும் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்கள் 200 ஆகவும் தினக்கூலி 600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டியும் ரேஷன் கடைகளுக்கான நிதி ஒதுக்கீடு 30 சதவீதம் குறைப்பு செய்ததை கண்டித்தும் ரேஷன் கடையில் எல்லோருக்கும் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வீடு கட்டும் திட்டத்தில் ஒரு வீட்டிற்க்கான ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டை ஆறு லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர்கலையரசி மாவட்ட தலைவர் முருகேசன், விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்லதுரை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின் மாவட்ட தலைவர் ரங்கநாதன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி