தொடர் திருட்டை தடுக்க வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

51பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், பெரம்பலூர் நகரம் மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளின் பூட்டுக்களை உடைத்து கொள்ளையடிப்பது, பெண்களிடம் தொடர்பு வழிபறியில் ஈடுபடுவது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்த தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் ஏற்பட்டு வருகிறது. எனவே தொடர் திருட்டு சம்பவங்களை கண்காணிக்க கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும், காவல்துறையினர் திருட்டு சம்பவங்களின் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும், இரவு நேரங்களில் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும், பொதுமக்களை பாதுகாப்பை உறுத்தி செய்ய வேண்டும், கூடுதல் காவல் நிலையங்களை உருவாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட. நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.

பேட்டி: கலையரசி, மாவட்ட செயற்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பெரம்பலூர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி