பெரம்பலூர் மாவட்டத்தில்
நடைபெற உள்ள குரூப் 4 தேர்வினை சிறப்பாக நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்து அலுவலர்கள் மற்றும் தலைமை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஜூன் ஒன்பதாம் தேதி அன்று நடத்தப்படவுள்ள தொகுதி IV தேர்வினை சிறப்பாக நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்து அலுவலர்கள் மற்றும் தலைமை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த போது பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 61 மையங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு பெரம்பலூர் வட்டத்தில் மொத்தம் 18, 169 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர்தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்களிலும் தேவையான மின்சார வசதி, குடிநீர் வசதி, போதுமான இருக்கைகள் போன்ற அனைத்து பணிகளும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்வு நடைமுறைகளை கண்காணிக்க 6 பறக்கும் படைகளும், 30 நடமாடும் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். என தெரிவித்தார்.