பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து, மாற்றுத்திறனாளி மாணவர்களை ஒரு நாள் கல்விச்சுற்றுலா அழைத்துச் சென்றவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று (மார்ச் 24) வழியனுப்பி வைத்தார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளும் மற்ற குழந்தைகளுக்கு இணையாக இருக்கும் வகையில் அவர்களை வருடந்தோறும் சுற்றுலா அழைத்துச்செல்ல அரசு வழிவகை செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டத்தில் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மைய மாணவர்கள் என 30 மாற்றுத்திறனாளி குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள், 6 சிறப்பு ஆசிரியர்கள் என மொத்தம் 59 நபர்கள் சுற்றுலா சென்றனர். குழந்தைகளை எங்கெங்கு அழைத்துச்செல்ல உள்ளீர்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்கும்போது, அண்ணா அறிவியல் கோளரங்கம், வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்வதாக மாற்றுத்திறனாளிகள் அலுவலர் தெரிவித்தார்.