கிராமசபைக் கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு

79பார்த்தது
பெரம்பலூர் மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு 121 ஊராட்சிகளிலும் (02. 10. 2024) கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலம்பாடி ஊராட்சியில் செஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இக்கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சியில் தணிக்கை அறிக்கை கிராம சபை ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்திடவும், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலமாக கிராம ஊராட்சி வளர்ச்சிக்கினா பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி