பெரம்பலூர்: சமூக தரவு கணக்கெடுக்கும் பணி.. கலெக்டர் ஆய்வு

65பார்த்தது
பெரம்பலூர்: சமூக தரவு கணக்கெடுக்கும் பணி.. கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட குரும்பலூர் பேரூராட்சியில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று (11.06.2025) நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், மாற்றுத்திறனாளி நல அலுவலக பணியாளர்கள், சமுதாய வள பயிற்றுநர்கள் (Community Resource Persons), தொண்டு நிறுவனம் உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி