எசனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

75பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் எசனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக அவ்வப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள். அதன்படி எசனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவமனையில் உள்ள உள் நோயாளி பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, மருந்தகம், ஆய்வகம், பேறு கால பெண்களுக்கான கண்காணிப்பறை, தனி வார்டு, கழிவறை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகளிடம் அங்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு விரைவான, தரமான மருத்துவ சேவைகளை மேற்கொள்ள மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளரிடம் அறிவுறுத்தினார். பின்னர் மருத்துவமனையில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், வருகை பதிவேடுகள் உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்து தினந்தோறும் சிகிச்சை மேற்கொள்ள வரும் நபர்கள் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளிலும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி