மாவட்ட மைய நூலகத்தில் கலெக்டர் ஆய்வு

79பார்த்தது
பெரம்பலூர் நகராட்சி பகுதியிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் (05. 09. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் வாசகர்கள் அமர்ந்து படிக்கும் பகுதி, குடிமைப்பணி மற்றும் போட்டித் தேர்வு நூல்கள் பகுதி, நாளிதழ்கள் மற்றும் பொது இதழ்கள் உள்ள பகுதிகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பு நடைபெறும் பகுதி உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் நூலகத்தில் போட்டித்தேர்வு (ம) UPSC தேர்வு தொடர்பான எத்தனை புத்தகங்கள் உள்ளது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுகள், அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள் நூலகத்தில் உள்ளதா என்று கேட்டறிந்தார். மேலும், நூலகத்தில் வாசகர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என கேட்ட மாவட்ட ஆட்சியர் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறைகளை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நூலக அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் போட்டித் தேர்விற்கு படிக்கும் மாணவரிடம் நூலகத்தின் வசதிகள் குறித்து கலந்துரையாடி னார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி