பெரம்பலூர் மாவட்டம், கோனேரி பாளையம் ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியோடு இணைக்க கூடாது என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள கோனேரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர் அதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில் தங்கள் கிராமத்தை பெரம்பலூர் நகராட்சியோடு இணைப்பதால் தங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு 100 நாள் வேலை நிறுத்தப்படுகிறது இதனால் இதை நம்பியுள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், மேலும் இரட்டிப்பு வசூல் செய்யப்படும், ஆகவே தங்கள் வாழ்வாதாரம் கருதி தங்கள் கிராமத்தை நகராட்சியோடு இணக்கக் கூடாது என தெரிவித்து , மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.