பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் காரை கிராமத்தில் 2/10/2024 இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காரை கிராமத்தில் நடைபெற்று வருகின்ற அரசமைப்பு உரிமை கல்வி மன்றம் சார்பாக குழந்தைகள் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சுற்றி சுத்தம் செய்து தருமாறும், பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை மாதம் இருமுறை தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும் என்றும், கழிவறைகளில் தடை இன்றி தண்ணீர் வர வேண்டும் என்றும், பாலார் பஞ்சாயத்து அமைக்கவும்,
குழந்தை பாதுகாப்பு குழுவை தொடர்ந்து செயல்படவும், ஊராட்சியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் நேயக் கழிவறைகள் அனைத்து பராமரிக்கவும், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் நிழல் தரக்கூடிய மரங்களை நடவும், காரை ராமலிங்கம் நகர் பகுதியில் வசிக்கும் கலை கூத்தாடிகள் மக்களுக்கு வீடு, தடையில்லா குடிநீர் மற்றும் கழிவறை அமைத்து தரவும் வலியுறுத்தி கிராம சபையில் மனு அளித்தனர்.