பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 04. 06. 2025 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சியர் தகவல்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது;
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகளில் “மக்களுடன் முதல்வர் (ஊரகம்)“ திட்டத்தின் மூலம் மூன்றாம் கட்டமாக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம்களில் அரசின் 15 துறைகளில் வழங்கப்படும் 44 சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெற்றுகொள்ளலாம். இச்சிறப்பு முகாமானது காலை 10. 00 மணியிலிருந்து மாலை 03. 00 மணி வரை நடைபெறும்.
அதன்படி, 04. 06. 2025 அன்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட டி. களத்தூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், லாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், எளம்பலூர் இந்திராநகரில் உள்ள ரோவர் மேல்நிலைப்பள்ளியிலும், எசனை அம்பேத்கர் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறும்.
மேற்படி மக்களுடன் முதல்வர் (ஊரகம்) முகாம்களில் கிராம பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயன்பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.