தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியினை பெரம்பலூர் மாவட்டம் குறும்பலூரில் உள்ள தனியார் அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் மற்றும் பெரம்பலூர் எம் எல் ஏ பிரபாபரன் ஆகியோர் நேரலையில் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு காய்கறி விதை தொகுப்புகள், பழச்செடி தொகுப்புகளை வழங்கினார்கள்.