அசூர் கிராமத்தில் அய்யனார் கோவில் தேர் திருவிழா

66பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் அசூர் கிராமத்தில் நடைபெற்ற அய்யனார் கோவில் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அசூர் கிராமத்தில் அய்யனார் மற்றும் சேர குலத்தான் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த மே மாதம் 30 ஆம் தேதி காப்பு கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சேர குலத்தன் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு, திருக்கல்யாணம் மலர் அலங்காரத்தில் சுவாமிகள் திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யனார் சுவாமி, சேரகுலத்தான் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் திருத்தேரில் அமர்ந்து அருள் பாலித்தனர். அதனைத் தொடர்ந்து அசூர் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குடி வழிபாட்டு மக்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி