பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில்,
தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் 5 முதல் 12 வரை விழிப்புணர் வாரமாக நடத்தப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் பெரம்பலூர் தீயணைப்பு மீட்பு பணி துறை சார்பாக மாவட்ட அலுவலர் அம்பிகா அறிவுறுத்தலின்படி பள்ளி மாணவ மாணவிகளுக்கு வினாடி வினா கட்டுரை போட்டி மூலம் விழிப்புணர்வு நடத்தப்பட்டது அதனை தொடர்ந்து அக்டோபர் எட்டாம் தேதி இன்று ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட அலுவலர் அம்பிகா துவங்கி வைத்தார் பெரம்பலூர் நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் தீயணைப்பு நிலைய வளாகத்தில் முடிவடைந்தது, இதில் தீயணைப்பு வீரர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி பேரணியாக சென்றனர்.
மாவட்ட அலுவலர். அம்பிகா தலைமையில் நடந்த பேரணியில் உதவி மாவட்ட அலுவலர்கள் வீரபாகு மற்றும் கோமதி, தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.