பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து மற்றும் One step Center உறுப்பினர் சீபா ஆகியோர்கள் இணைந்து பெரம்பலூர் மாவட்டம் எசனை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடத்தினார்கள்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகளிடம் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், அதற்கான தண்டனைகள் கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் உதவி எண்களான
பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181
Women Help Desk 112
குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098
பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 முதியோர் உதவி எண்கள் 14567
சைபர் கிரைம் உதவி எண்கள் 1930 ஒவ்வொரு மாணவிகளும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தங்களது பெற்றோர்களிடம் அச்சமின்றி தெரிவித்து அதற்கான தீர்வினைப் பெற வேண்டும் என்றும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தொடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.