அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

62பார்த்தது
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மணிமேகலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 1993 காண பதவி உயர்வினை உடனடியாக வழங்கிட வேண்டும். மத்திய அரசின் சார்பில் அங்கன்வாடி திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியினை குறைக்காமல் அதிகப்படுத்திட வேண்டும். தரமான
உணவினை சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு வழங்கும் வகையில் அங்கன்வாடி மையங்களின் உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவ தோடு அனைத்து மையங்களுக்கும் சொந்த கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அரசு சார்பில் நடத்தப்படும் எல். கே. ஜி. , யு. கே. ஜி. , வகுப்புகளை அங்கன்வாடி
அமைப்பாளர்களைக் கொண்டு நடத்திட வேண்டும் மற்றும் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷமிட்டனர். இதில் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் மேனகா, மாவட்ட செயலாளர் தமிழரசி உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி