ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.
பெரம்பலூரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாளித்து வரும் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு இன்று ஆடி கிருத்திகை முன்னிட்டு மூலவர், மற்றும் உற்சவர்களுக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் முடிந்து சுவாமிக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை கோவில்
செயல் அலுவலர் கோவிந்தராஜன் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், உள்ளிட்ட செய்திருந்தனர்,