தியாகி இம்மானுவேல் சேகரனாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை

237பார்த்தது
தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 100-வது பிறந்தநாள் விழா பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை அருகில் நேற்று நடைபெற்றது, பெரம்பலூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமையில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்சியில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் வாலையூர் குணா ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் செட்டிகுளம் குணா, மதியழகன், மணிகண்டன், பிரகாஷ், சத்தியராஜ், சோலைமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் திமுக சார்பில் பெரம்பலூர் நகர் மன்ற முன்னாள் துணைத் தலைவர் முகுந்தன், தொமுச குமார், அதிமுக சார்பில் 12-வது வார்டு பிரபாகரன், பிஜேபி சார்பில் மாவட்டத் தலைவர் செல்வராஜ் , பிச்சைமுத்து , சதீஷ், மதிமுக சார்பில் துரைராஜ், பிரபாகரன், ஜெயபிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செல்லதுரை , ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்துசாமி, பாமக சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தாமோதரன் பெரும்புலியூர் இராகு, திக சார்பில் தங்கராசு அக்ரி ஆறுமுகம், விசிக சார்பில் ராம்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் வாழ்க்கை வரலாற்றையும் போராட்ட வரலாற்றையும் எடுத்துரைத்து புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி