பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சி

52பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா முன்னிலையில் (01. 10. 2024) நடைபெற்றது
பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளை பாலியல் துன்புறுத்துதலில் இருந்து காப்பது, பாலியல் வன்முறை தொடர்பாக பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் துளிர் அறக்கட்டளையின் வாயிலாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / ஆதிதிராவிட / நிதியுதவி / சுயநிதி / மெட்ரிக் / CBSE/ தொடக்க/ நடுநிலை/ உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 250 தலைமையாசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்றுள்ள தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாலியல் வன்முறை தொடர்பான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி