பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெருமத்தூர் குடிகாடு ஏரியில் சிலர் மணல் திருடுவதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் அப்பகுதியில் சப்-கலெக்டர் கோகுல் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளிக்கொண்டு இருந்த குன்னம் தாலுகா வடக்கலூர் அகரம் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 40) என்பவர் அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மகேந்திரனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்