பெரம்பலூர்: 17 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளது

62பார்த்தது
பெரம்பலூர்: 17 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளது
தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத் துறையின் சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் 1000 "முதல்வர் மருந்தகங்களை" காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்வினை பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் உள்ள முதல்வர் மருந்தகம் அருகில் நேரலையில் ஒளிபரப்பப்படுவதை போக்குவரத்து துறை அமைச்சர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பார்வையிட்டு பின்னர் முதல் விற்பனையை தொடங்கி வைக்க உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 17 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி