பெரம்பலூர்: 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

63பார்த்தது
பெரம்பலூர் சங்குப்பகுதியில் உள்ள தனியார் அரங்கில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சிறப்பு மாநில பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பாபு தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ஆனந்தராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார் கூட்டத்தில் தமிழக அரசால் தற்பொழுது நடைமுறைப் படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்கு சம்பளத்துடன் கூடிய பேரு கால விடுப்பு 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் மேலும் நிர்வாகத்துடன் எட்டப்பட்ட 12(3) ஒப்பந்தத்தின் படி பெண் தொழிலாளர்களுக்கு தனி ஓய்வு அறை கழிவறை வசதி உடனடியாக அமல்படுத்திட திட்ட இயக்குனருக்கு கோரிக்கை வைத்தும், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் நிலை உணர்ந்து அவரது கோரிக்கை ஏற்கும் வகையில், சென்னை தலைமை அலுவலகத்திற்கு அருகாமையில் மாநில தலைமை தொழிற்சங்க அலுவலகத்தை மாற்ற வேண்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்கும் சிறப்பு மாநில பொது குழு கூட்டத்தை தொடர்ந்து அடுத்த கட்டமாக சென்னை மண்டலத்திலும், மதுரை மண்டலத்திலும் சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள் நடத்துவது எனவும், தொழிற்சங்கத்தின் உள்கட்டமைப்பை சரிசெய்ய அனைத்து தொழிலாளர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி