108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் சங்க கூட்டம்

81பார்த்தது
பெரம்பலூர் பழைய நகராட்சி பின்புறம் உள்ள மைதானத்தில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் சங்கத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்,
மாவட்ட செயலாளர்
செல்வகுமார் தலைமையில்,
மாவட்ட உறுப்பினர்
கண்ணன் முன்னிலையில் நடை பெற்றது,
இக்கூட்டத்தில்,
கடந்த ஆண்டு, இதே நாளில் பணியில் போது விபத்தில் உயிரிழந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ராஜேந்திரனக்கு முதலாம் ஆண்டு இரங்கல் தெரிவித்தும்,
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 17 ஆம்புலன்ஸ்களுக்கும் முறையாக பேட்டரி செக்கப் செய்ய வேண்டும் மற்றும் ஆம்புலன்ஸில் ஏற்படும் பழுதுகளை எந்த ஒரு கால தாமதமும் இல்லாமல் பணிமனைக்கு அனுப்பி சரி செய்து தர மாவட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும்,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 17 ஆம்புலன்ஸ்களில் ஆண், பெண் தொழிலாளர்கள் சுமார் 80 பேர் பணிபுரிந்து வருகின்றனர் அவர்களுக்கு கடந்த 15 ஆண்டு காலமாக முறையான ஓய்விடம் வாகன நிறுத்தம் கழிப்பறை வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர், அதனை செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன, இக்கோரிக்கைகள நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக போராட்ட களத்திற்கு செல்வது எனவும், கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஓராண்டு முன்பு பணியின் போது விபத்தில் உயிரிழந்த ஓட்டுனர் ராஜேந்திரன் சமாதியில் கல்வெட்டு பதிக்கப்பட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

தொடர்புடைய செய்தி