குன்னம் - Kunnam

பெரம்பலூர்: பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

பெரம்பலூர்: பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி (22. 11. 2024 ) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து, அனைத்து மகளிர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கார்த்திகாயனி தலைமைக்காவலர் லதா மற்றும் மீரா ஃபவுன்டேசன் பணியாளர்கள் மணிமாறன் அனுரேகா ஆகியோர்கள் இணைந்து வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், மற்றும் பெண் குழந்தை திருமணத்தை எதிர்ப்போம், என்றும் உறுதிமொழி எடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த இவிழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற உயிருக்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்களை உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை அருந்தி உயிரிழப்பவர்களின் குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

வீடியோஸ்


பெரம்பலூர்