காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்ததற்கு உணவுத்துறை இடம் புகார் அளித்து நடவடிக்கை இல்லை என்பதால் சமூக ஆர்வலர்கள் நாம் தமிழர் கட்சியினர் தொட்டில் கட்டி நூதன போராட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இதில் பெரம்பலூர் மற்றும் பல்வேறு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர், தொட்டில் கட்டி நூதன முறையில், உணவுத்துறை தூங்குகிறது என தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் பதப்படுத்தப்பட்ட சிப்ஸ், கூல்டிரிங்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்கள் காலவதியாகியும் விற்பனை செய்து வருகின்றனர், இதனால் பாதிப்பு ஏற்படுகிறது, இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையிடம் ஏற்கனவே புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதால் உணவுத்துறை தூங்குகிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் தூக்கு கட்டி மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்க வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.