புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு அமுல்படுத்த வேண்டும்
தேர்தல் கால வாக்குறுதியின் படி நிலுவைக் கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சர்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் பெரம்பலூரில் நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் குமரி அனந்தன் தலைமையில்இன்று போராட்டம் நடைபெற்றது, இதில்
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும்,
கடந்த ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு தொகை உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும்,
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட
தேர்தல் கால வாக்குறுதியின் படி நிலுவையில் உள்ள கோரிக்களை
வலியுறுத்தி 24 நேர தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும்
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டது.
இந்த தர்ணா போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.