பெரம்பலூரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு துணையால் தலையில் முக்காடு அணிந்தவாறு ஒப்பாரி வைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், அதன் கோட்டச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் பெரம்பலூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று மதியம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தினை பனிக்காலமாக வரைமுறைப்படுத்திட வேண்டும், தமிழகத்தில் சுங்க வரி வசூலிப்பின் மூலம் பல்லாயிரம் கோடி மோசடி நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் அரசாணை 140 தடை செய்திட வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் 60 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் சுங்கச்சாவடி அமைப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலையில் கருப்பு துணியாய் முக்காடு அணிந்தவாறு, நெஞ்சில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து முழக்கமிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த இந்த போராட்டத்தில் சங்கத்தின் கோட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.