தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

59பார்த்தது
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் நூறாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் கோவை மாநகர் பகுதியில் ஒரு பாலத்திற்கு அவரது பெயரும் தொடர்ந்து அவரது சொந்த ஊரான வையம்பாளையத்தில் நினைவு வளையமும் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில்
தமிழகத்திலேயே பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தான் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் முழு திருஉருவச் சிலை உள்ளது
இதனிடையே இச்சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும் விபத்து ஏற்படுவதாகவம் கூறி உண்மைக்கு புறம்பாக பெரம்பலூர் நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்த தீர்மானத்தை கண்டித்து பல்வேறு விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து
கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
நகராட்சி நிர்வாகம் தீர்மானத்தை ரத்து செய்யாவிட்டால் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எச்சரித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி