பெரம்பலூரில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் குறைந்தபட்ச ரூ. 5, 000 ஓய்வூதியம் வழங்கிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் அதன் மாவட்ட செயல் தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், EPF பென்ஷன் குறைந்தபட்சம் ரூபாய் 5000 வழங்கிட வேண்டும். EPF ஊதிய உச்சவரம்பை ரூபாய் 30, 000 ஆக உயர்த்திட வேண்டும். ESI ஊதிய உச்சவரும்பை 42, 000 ஆக உயர்த்திட வேண்டும், பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு விற்கக் கூடாது, காப்பீடு மற்றும் நிதித்துறைகளில் அந்நிய முதலீட்டை முழுமையாக கைவிட வேண்டும் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பிற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில செயலாளரும், மாவட்ட பார்வையாளருமான தனியரசு, மாநில துணைத்தலைவர் மணிவேல் ஆகியோர் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முழக்கமிட்டு அதனை விலக்கிப்பேசினர்.