பெரம்பலூர் அருகே மங்களமேடு பகுதிகளைச் சேர்ந்த, வெற்றிவேல் -16, ஆகாஷ் -16, சிவராமன் வயது 16, மற்றும் சின்னாறு எறையூர் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் வயது - 16 மேலும் பெருமத்தூர சேர்ந்த முத்துக்குமார் - 17, ரகு -20, ஆகிய 6 பேரும் எறையூர் சர்க்கரை ஆலை பகுதியில் உள்ள நேரு அரசு உதவி பெரும் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகின்றனர் இந்நிலையில் இன்று 6 மாணவர்களும் முருக்கங்குடி பகுதியில் இருக்கும் குவாரி பகுதியில் உள்ள நீர் நிலையில் குளித்துவிட்டு, ஒரு இருசக்கர வாகனத்தில் 6 பேரும் மங்களமேடு நோக்கி சென்றுள்ளனர் இதில் ரகு என்பவர் வண்டியை ஓட்டி வந்துள்ளார், அப்போது தேசிய நெடுஞ்சாலையில் முருக்கங்குடி பிரிவு பாதையில் சாலையை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று டூ வீலர் மீது எதிர்பாராமல் மோதியது, இதில் டூவீலரில் வந்த 6 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர், உடனடியாக அங்கிருந்தவர்கள் ஆறு பேரையும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் முத்துக்குமார் -16 என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மேலும் சிவராமன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் மற்றவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இதுகுறித்து மங்களமேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்