பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் ஊராட்சி அளவில் 121 ஊராட்சிகளில் 09.09.2024 முதல் 12.09.2024 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், மாவட்ட அளவில் 25.09. 2024 அன்று நடைபெறவுள்ளது.
கிராம ஊராட்சிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் வட்டார அளவில் நடைபெறும் ஊட்டசத்து போட்டிகளிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிகுழுக்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தகுதியுடையோர் ஆவார்கள்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு பெரம்பலூர் வட்டார இயக்க மேலாளர் அவர்களை 9659935852 என்ற எண்ணிலும், ஆலத்தூர் வட்டார இயக்க மேலாளர் அவர்களை 8870460112, என்ற எண்ணிலும், வேப்பந்தட்டை வட்டார இயக்க மேலாளர் அவர்களை 6383774958 என்ற எண்ணிலும் வேப்பூர் வட்டார இயக்க மேலாளர் அவர்களை 8098739490 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.