மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (ம) காவல்துறை வாகன ஆய்வு

58பார்த்தது
மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (ம) காவல்துறை வாகன ஆய்வு
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் 05. 08. 2024-ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் வாகனங்களை ஆய்வு செய்து காவலர்களுக்கு அவற்றை பராமரிப்பது குறித்த அறிவுரைகள் வழங்கினார். பின்னர் அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் முன்னிலையில் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தும், புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற கலந்தாய்வும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க ஆலோசனையும் வழங்கினார்.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கையாள்வது (ம) பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான கலந்தாய்வு நடத்தினார். இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மதியழகன் பாலமுருகன் மற்றும் பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், தனசேகரன், மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் காமராஜ், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணைக்காவல் கண்காணிப்பாளர் பிரபு மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், நீதிமன்ற காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி