பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் எறையூர் ஊராட்சியில் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் எறையூர் கிளை கழக செயலாளர் சின்னதுரை ஏற்பாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நீர் மோர் தண்ணீர் பந்தலை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் ஆகியோர் திறந்து வைத்தனர். வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜெகதீஸ்வரன், பெரம்பலூர் மாவட்ட கழக பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.