பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய அமைச்சர்

73பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (02. 06. 2025) சென்னை திருவல்லிக்கேணி லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2025- 26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாட நூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்
அதனை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி சீருடைகள், பாடநூல்கள் மற்றும் புத்தகப் பையினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் வழங்கினார்.
இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் பேசியதாவது: பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் 429 அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 53, 877 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி சீருடைகள், புதிய பாட நூல்கள் மற்றும் புத்தக பைகள் வழங்கப்பட உள்ளது - போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் அமைச்சர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி