பெரம்பலூர்: கல்வி உபகரணங்களை குழந்தைகளுக்கு வழங்கிய அமைச்சர்

83பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அருணகிரிமங்கலம் குழந்தைகள் மையத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் பள்ளிச் சீருடைகள் மற்றும் முன்பருவக் கல்வி உபகரணங்களை குழந்தைகளுக்கு இன்று வழங்கி துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை எளிய அடித்தட்டு மக்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றார்கள். 

அதன் ஒரு பகுதியாக சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வியை வழங்கி வருவதோடு, அவர்களின் ஊட்டச்சத்தையும் பேணிக் காக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் முன்பருவக் கல்விக்கு குழந்தைகள் மையங்களில் பதிவு செய்யும் குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 490 குழந்தைகள் மையங்களில் பயிலும் 18,804 குழந்தைகளுக்கு 1 குழந்தைக்கு 2 சீருடைகள் என்ற அடிப்படையில் 37,608 சீருடைகள் வழங்கும் பணியினை தொடங்கி வைத்திடும் விதமாக இன்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அருணகிரிமங்கலம் குழந்தைகள் மையத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்கள்.

தொடர்புடைய செய்தி