ஓய்வு பெற்ற BSNL ஊழியர் வீட்டில் பட்ட பகலில், கள்ளசாவி போட்டு வீட்டை திறந்து 15 பவுன் நகை 50 ஆயிரம் பணம் திருட்டு போலீசார் விசாரணை.
பெரம்பலூர் நகர் அங்காளம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள சூப்பர் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் செல்வராஜ். இவர் மனைவி தனலட்சுமி. இவர் BSNL நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தனது மனைவியுடன் அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள வயலுக்கு செல்வராஜ் பெரம்பலூரில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
வயல்
வேலை முடித்துவிட்டு மீண்டும் பெரம்பலூர் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது இரும்பு கேட்டின் கதவு திறந்திருந்தது கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவை உடைத்து அதிலிருந்து 15 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணம் ஆகியவை மர்ம நபர்களால் திருடுடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு கொடுத்த புகார் என்பேரில் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உடன் அந்த போலீசார் ஆய்வு செய்து கள்ள சாவி போட்டு கதவை திறந்து பீரோவில் இருந்த நகை பணத்தை திருடி சென்ற நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை செய்து தேடி வருகின்றனர்.