பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு கிராமத்தில் கிணற்றில் ஏற முடியாமல் தவித்த, விவசாயியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு கிராமத்தைச் சேர்ந்த
அருணாச்சலம் மகன் அண்ணாமலை வயது 57 இவர் இண்டு வயலில் உள்ள கிணற்றில் இறங்கி வேலை செய்துள்ளார் அப்போது உடல் நலக் குறைவால் ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார், இது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இருந்து ஏற முடியாமல் தவித்த அண்ணாமலையை, கயிறு கட்டு அதன் மூலம் அவரை கிணற்றில் இருந்து உயிருடன் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.