பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து பெரம்பலூர் நகராட்சி, எளம்பலூர், தண்ணீர் பந்தல், வேப்பூர், சித்தளி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் லக்ஷ்மி, மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ்,. முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்த தினசரி காய்கனி சந்தைக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படவுள்ளதால் பழுதடைந்த நிலையில் உள்ள பழைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 248 லட்சம் மதிப்பீட்டில் 115 கடைகள் கட்டும் பணியினை விரைந்து மேற்கொண்டு குறித்த காலத்திற்குள் பணியினை முடித்திட நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, தினசரி காய்கனி சந்தைக்கான புதிய கட்டடங்கள் கட்டப்படும் வரை, தற்காலிகமாக உழவர் சந்தை அருகில் தினசரி காய்கனி சந்தை செயல்படும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் பார்வையிட்டார், தொடர்ந்து எளம்பலூர் தண்ணீர் பந்தல் குள்ளிட்ட இடங்களில் பல்வேறு துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் அதனை