திராவிட விடுதலைக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

53பார்த்தது
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து திராவிட விடுதலைக் கழகத்தின் மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காத நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கை பிரிப்பதை கைவிட வேண்டும் தமிழகத்தில் கல்வி கட்டமைப்பை சிதைக்கும் பிஜேபியின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும் உள்ளிட்ட செயல்களுடன் ஈடுபடும் மத்திய அரசின் கொள்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகி ராஜேஷ்குமார் சுதாகர் மற்றும் திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் தங்கராசு, மற்றும் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரின் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் வீர செங்கோலன் மக்கள் அதிகாரம் கட்சியின் மாவட்ட செயலாளர் காவிரிநாதன் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ், தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் மாவட்ட செயலாளர் தேனரசன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் காமராசு, உள்ளிட்ட பல்வேறு அமைப்பு மற்றும் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி