போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 கடுங்காவல் சிறை தண்டனை

82பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த நல்லதுரை (30) என்பவர் அதே ஊரைச் சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக நல்லதுரை மீது மருவத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இவ்வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி நீதிமன்ற விசாரணையில் இருந்த இந்த வழக்கில் 05. 02. 2025-ம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கின் குற்றவாளி நல்லதுரை என்பவருக்கு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 07 வருடம் சிறை தண்டனை மற்றும் 10, 000 ரூபாய் அபராதம் விதித்தும், போக்சோ குற்றத்திற்காக 20 வருடம் சிறை தண்டனை மற்றும் 50, 000 ரூபாய் அபராதம் விதித்தும் இதன்படி குற்றவாளிக்கு 20 வருடம் சிறை தண்டனை மற்றும் 60, 000 ரூபாய் அபராதம் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற பெண் தலைமைக் காவலர் கீதா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா வெகுவாக பாராட்டினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி