ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

66பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில், கிராமப்புற வளர்ச்சிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டப் பணிகள் அனைத்தும் குறித்த காலத்திற்குள் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதுகுறித்து, ஒவ்வொரு வாரமும்ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து நிலை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் விவரங்கள், கலைஞரின் கனவு இல்லம் மற்றும் பிரதான் மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பயனாளிகளின்வீடுகளின் முன்னேற்ற நிலை குறித்தும், இதுவரை தொடங்கப்படாத பயனாளிகளின் வீடுகளை விரைந்து தொடங்கிடவும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் முடிவுற்ற திட்டப் பணிகள், நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடித்திட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி