போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் சான்று

1526பார்த்தது
பெரம்பலூரில் உலக சிக்கன நாளை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு சான்றிதழ் வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி உலக சிக்கன நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதனை முன்னிட்டு சிக்கனத்தின் முக்கியத்துவத்தை மாணவர்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் வகையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வு போட்டிகளில் நடத்தப்பட்டது.

இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பிப்ரவரி 22ம் தேதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது சிறு சேமிப்பு மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் பாஸ்கரன் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி