காசநோய் இல்லாத ஊராட்சி, பாராட்டு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்

70பார்த்தது
பெரம்பலூர் ஆட்சியரகத்தில், காச நோய் தினத்தை முன்னிட்டு பொது சுகாதாரம் (ம) நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் காசநோயாளிகள் இல்லாத 10 ஊராட்சிகளை பாராட்டி “காசநோய் இல்லா பஞ்சாயத்து” என்ற பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பொதுமக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 24-ம் தேதி உலக காசநோய் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது
இதனால் காச நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் லவகையிலும் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை (ம) மாவட்ட நிர்வாகம் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும், சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், ஒவ்வோர் ஆண்டும் காச நோயாளிகள் இல்லாத 10 ஊராட்சிகளை தேர்வு செய்து அந்த ஊராட்சிக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படுகின்றது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை, கோனேரிபாளையம், தழுதாழை, தொண்டப்பாடி, கண்ணப்பாடி, பிலிமிசை, அய்யனாபுரம், புஜங்கராயநல்லூர், ஒதியம், வரகூர் ஆகிய 10 ஊராட்சிகளுக்கும் பாராட்டுச்சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி