பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 186 புதிய வீடுகள் கட்டுவதற்கு ரூ. 6. 51கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது - பயனாளிகளின் வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தகவல்
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுள்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் “நிறைந்தது மனம்“ என்ற திட்டத்தின் கீழ் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் பிரதம மந்திரியின் வீடுகள் கட்டும் திட்டப் பயனாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டு பயனாளிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, வீடற்ற நிலையில் இருந்த தங்களுக்கு அரசின் திட்டங்கள் மூலம் வீடுகள் வழங்கியதற்காக அரசிற்கு பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தெரிவித்தனர்.